தென்னகத்து தெட்சின துவாரகை மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 28-ம் தேதி நடைபெறுவதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 January 2026

தென்னகத்து தெட்சின துவாரகை மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 28-ம் தேதி நடைபெறுவதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்.


மன்னார்குடி, ஜன. 23:


தமிழகத்தின் மிகப் பழமையான வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் மாவட்ட மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், பக்தர்களால் தென்னகத்து தெட்சின துவாரகை எனப் போற்றப்படும் இத்தலத்தில், வரும் ஜனவரி 28-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இறுதிக்கட்ட திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இந்தக் கோயிலில், டி.ஆர்.பி. ராஜா அவர்களின் முயற்சியின் பேரில், தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் சுமார் ரூ.16 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலின் கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் வகையில், பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக, அண்மையில் பந்தக்கால் நடப்பட்டு, கோயிலின் ஈசானிய மூலையில் சுமார் 3,500 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான அமைப்புடன் சாலை அமைக்கும் பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்நிலையில், கும்பாபிஷேகம் நெருங்கி வருவதால், கோயிலின் கோபுரம் மற்றும் மண்டபங்களில் வர்ணம் பூசுதல், சாரம் அமைத்தல், மின்சார அலங்கார பணிகள் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இதற்கு முன்பு 2010-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற உள்ள இந்த மகத்தான கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad