மன்னார்குடி | ஜனவரி 01
மன்னார்குடி நகரில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக மற்றும் பிற மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 200-க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில், அதிமுகவில் புதிதாக இணைந்த அனைவருக்கும் கட்சி துண்டு அணிவிக்கப்பட்டு, புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தாங்கள் அதிமுகவில் இணைந்துள்ளதாக புதிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், அதிமுக மன்னார்குடி நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, புதிதாக இணைந்தவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினர். இந்த பெருமளவிலான இணைவு, திருவாரூர் மாவட்ட அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment