மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: மன்னார்குடியில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 January 2026

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: மன்னார்குடியில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


மன்னார்குடி, ஜனவரி 25 :



தமிழக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் மொழிப்போரில் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், அதிமுக சார்பில் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி, நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad