அந்த அறிவிப்புக்கு ஏற்ப, திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் மழையின் தீவிரம் அதிகரித்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று பிற்பகல் 2 மணி அளவில் திருவாரூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
வாழவாய்க்கால், சேந்தமங்கலம், விளமல், அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, கண்கொடுத்தவணிதம், கமலாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர். சில தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து மெதுவாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
.jpg)
No comments:
Post a Comment