மன்னார்குடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 6 November 2025

மன்னார்குடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.


மன்னார்குடி, நவம்பர் 5:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்த திருத்தலமாகும். புகழ்பெற்ற ராஜகோபாலசாமி கோவிலில் அருள்பாலிக்கும் செங்கமலத்தாயார் இதே திருப்பாற் கடலில் தான் அவதரித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.


அப்படிப்பட்ட திருத்தலமான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில், நேற்று (நவம்பர் 5) அன்னாபிஷேகம் ஆன்மிக சிறப்புடன் நடைபெற்றது. இதனையொட்டி மாலை வேளையில் சிவபெருமானுக்கு அன்னம், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிவபெருமானை அழகாக அலங்கரித்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்மன் தெய்வ தரிசனம் செய்து ஆன்மிக மகிழ்ச்சி அடைந்தனர். ஆலய வளாகம் முழுவதும் “ஹர ஹர மஹாதேவா” என்ற ஓசை முழங்கியது.


© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

No comments:

Post a Comment

Post Top Ad