இளஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சினேகா (23)வை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு குடும்ப தகராறால் அரவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார். 13ம் தேதி நினைவு தினம் முடிந்தபின், சினேகா, அவரது குழந்தை, இளஞ்சியம், தங்கபாண்டியன் ஆகியோர் 18ம் தேதி எடமேலையூர் சென்றனர். 20ம் தேதி திருப்பூர் செல்லுமுன் சினேகா தங்கபாண்டியனுடன் மன்னார்குடி பேருந்து நிலையத்துக்கு சென்றார். அதன் பிறகு அவர் காணாமல் போனதால், அவரது தாய் தமிழ்ச்செல்வி போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், சினேகா தனி குடித்தனம் கோருவது, சினேகாவின் சொத்து பங்குக்கு பயம், திருப்பூரில் சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்ட சந்தேகங்கள் காரணமாக, இளஞ்சியம் மற்றும் தங்கபாண்டியன் இணைந்து கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது. இந்த இருவரும் கோயிலுக்கு செல்வது போல காட்டி, சினேகாவை எடமேலையூருக்கு அழைத்து வந்து, அடித்து கொன்று, பின்னர் சாக்குமூட்டையில் கட்டி சோனாப்பேட்டை கால்வாயில் வீசினர்.
போலீசார் உடலை தேடியபோது, சம்பவ இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் கோரையில் சிக்கி இருந்த சினேகாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மன்னார்குடி நகர காவல் போலீசார் இளஞ்சியம் மற்றும் தங்கபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment