சவளக்காரன் அரசு பள்ளியை சூழ்ந்த மழைநீர்: உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 November 2025

சவளக்காரன் அரசு பள்ளியை சூழ்ந்த மழைநீர்: உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை.


மன்னார்குடி, நவ.26 -

மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையான நீர்மூழ்கல் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. ராமபுரம், கீழநாலாநல்லூர், மேலநாலாநல்லூர், வேங்கைபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏழை மற்றும் விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.


பள்ளி வளாகத்திற்கு அருகில் இருக்கும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள குளம், மழைநீரால் நிரம்பி பள்ளிக் கட்டிடத்தை முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி கட்டடத்தில் ஈரப்பதம் பெருகி கட்டிடம் சேதமடைவதோடு, மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.


பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் பலமுறை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியம் போன்ற அதிகாரிகளிடம் புகார்–கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஆகையால், பள்ளியின் துயரமான நிலையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பள்ளிக்கு அடுத்துள்ள பயன்பாட்டிலில்லாத குளத்தை மண் அடித்து தூர்வாரி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad