விக்கிரவாண்டியம் அருகே உள்ள காரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு எதிர்ப்பு போராட்டம் 2015 ஜூலை 16 அன்று நடைபெற்றது. அப்போது நிறுவன தளவாடங்கள் சேதப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் பேரில் பி.ஆர்.பாண்டியன், அன்றைய ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் உட்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மன்னார்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து பின்னர் திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடைபெற்றபோது 2 பேர் உயிரிழந்தனர். இறுதி விசாரணையில் நீதிபதி சரத்ராஜ் 18 பேருக்கு விடுதலை வழங்கினார்.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை மற்றும் ரூ.13,000 அபராதமும், செல்வராஜுக்கு 13 ஆண்டு சிறை மற்றும் ரூ.13,500 அபராதமும் விதிக்கப்பட்டன. இந்த தீர்ப்பு திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment