திருவாரூர் மாவட்டத்தில் சில நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழையால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க மாநில அரசிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் வேளாண் மற்றும் வருவாய்துறை இணைந்து சேத மதிப்பீடு செய்ய அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், வலங்கைமான் பகுதிகளில் இன்னும் அதிகாரிகள் பயிர் சேத நிலையை நிலவரம் பார்த்து கணக்கெடுக்க வராததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போதைய டிஜிட்டல் செயலி மூலம் கணக்கெடுப்பை ரத்து செய்து பழைய முறைப்படி நிலத்துக்கு சென்று சேதத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே அனைவரும் நிவாரணம் பெற முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
விவசாயிகள், சேதமடைந்த நெற்பயிர்களுக்கான கணக்கெடுப்பு உடனே நடைபெற்று, விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment