இந்த நிலையில், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு சம்பா நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மொத்தம் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நன்றாக வளர்ச்சியடைந்து இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையால் பாசன நிலங்கள் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றுவிட்டது. இதனால் சம்பா இளம் நெற்பயிர்கள் நீரில் முழ்கி கிடக்கின்றன. நீர் சரியாக வடியாமல் நிலத்தில் தேங்கி இருப்பதால், நெற்பயிர்களின் வேர்கள் அழுகத் தொடங்கியுள்ளன.
ஒருபோக சாகுபடி செய்து மழையை நம்பி பயிரிட்ட விவசாயிகள் தற்போது பெரும் துயரத்தில் உள்ளனர். “மழைநீர் விரைவில் வடியவில்லை என்றால், முழு நெற்பயிரும் அழியும் அபாயம் உள்ளது,” என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலைமையினைப் பரிசோதித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment