அவர் திருக்காரவாசல், நார்த்தங்குடி, கொட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதத்தை ஆய்வு செய்தார். பின்னர் திருவாரூர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
“முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் வழங்கப்பட்டது. மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்டு, குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி அதிகரித்துள்ளது.
அதேபோல், 1.84 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறுவை சாகுபடி மூன்று மடங்கு உயர்ந்து, அதனுடன் விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 1,888 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு முழுவீச்சில் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.”
அவர் மேலும் கூறினார்:
“மழை மற்றும் தீபாவளி காரணமாக ஆரம்பத்தில் கொள்முதல் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. தற்போது முழு வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சிக் காலத்தில் 600 கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஒவ்வொரு நிலையத்திலும் 1,000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது.”
“அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசின் நான்கரை ஆண்டுகளில் ரூ.1,959 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.”
“முந்தைய ஆட்சியில் 1.27 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சேமிப்பு கிடங்குகள் மட்டுமே இருந்தது. தற்போது 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.”
“மழையால் 2,555 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் 33 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 25,610 ஹெக்டேர் நிலப்பரப்பில் நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கெடுப்பு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். சம்பா பயிர் பாதிப்பு பின்னர் கணக்கெடுக்கப்படும்.”
“22 சதவிகித ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய குழுவினர் விரைவில் ஆய்வுக்காக வரவுள்ளனர்,” எனவும் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
“எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக யாரோ எழுதித் தருவதைப் படித்து வருகிறார். முதல்வராக இருந்தபோது விவசாயிகளை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாங்கள் அனைவரும் தளத்தில் இறங்கி மக்களுக்காக உழைத்தோம்,” என்றார்.
இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், தாட்கோ தலைவர் இளையராஜா, திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment