திருவாரூர், அக்டோபர் 23:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை உலக பிரசித்தி பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் ஒலியுல்லா தர்காவில் 724வது ஆண்டு பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று புனித கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. தர்காவில் புனித கொடிக்கு துவாக்கள் ஓதப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித கொடி பல்லக்கு ஊர்வலம் தர்காவிலிருந்து புறப்பட்டு ஆசாத் நகர், முத்துப்பேட்டை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. 95 அடி உயரமுள்ள கொடிமரத்தில் புனித கொடி ஏற்றப்பட்டது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஜாதி மற்றும் மதம் வேறுபாடின்றி, பங்கேற்று காந்தியத்தில் புனிதத்தை அனுபவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 724வது பெரிய கந்தூரி திருவிழா 14 நாட்கள் தொடரவுள்ளது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சந்தக்னகூடு விழா 1.11.2025 சனிக்கிழமை, அதிகாலை 2.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளதைக் குறிப்பிடத்தக்கது.
.jpeg)

No comments:
Post a Comment