திருவாரூர், அக்.28-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் மிகுந்த பக்தி சிறப்புடன் நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் உள்ளிட்ட அனைத்து வைபவங்களும் சடங்குகள் பூர்வமாக நடந்தன. விழாவின் நிறைவு நாளில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதமாக மணமேடையில் எழுந்தருளினர்.
மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிவாச்சாரியார்கள் ஹோம குண்டம் அமைத்து பூஜைகள் நடத்தினர். பின்னர் கங்கணம் கட்டுதல், சங்கல்பம், திருமாங்கல்யம் அணிவித்தல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருமணச் சடங்குகள் மரபுப்படி நடைபெற்றன. இந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “அரோகரா” என்ற முழக்கத்துடன் முருகப்பெருமானை வழிபட்டு, புனித தரிசனம் செய்தனர்.
.jpg)
.jpg)
No comments:
Post a Comment