திருவாரூரில் வடநாட்டவர்கள் குடும்பமாக ஒன்றுகூடி சத்பூஜை விழா கொண்டாடினர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 October 2025

திருவாரூரில் வடநாட்டவர்கள் குடும்பமாக ஒன்றுகூடி சத்பூஜை விழா கொண்டாடினர்.


திருவாரூர், அக். 28 -

திருவாரூரில் இன்று வடநாட்டினர் குடும்பங்களாக ஒன்றுகூடி, பழங்கால மரபுகளை பின்பற்றி இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் சத்பூஜை விழா பக்தி பூர்வமாக நடைபெற்றது. பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வந்து திருவாரூரில் வசிக்கும் குடும்பங்கள், கமலாலயத் திருக்குளத்தில் ஒன்றுகூடி சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்தினர்.


வடஇந்தியாவில் ஐப்பசி மாத அமாவாசைக்கு பின் நான்கு நாட்கள் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் சத்பூஜை விழா நடத்தப்படுகிறது. இதில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திலும் மறுநாள் உதயமானபோதும் வழிபாடு நடத்துவது வழக்கம். பெண்கள் செங்கரும்பு தோரணங்கள், பழவகைகள், காய்கறிகள், மட்டை தேங்காய், பூக்கள் ஆகியவற்றை படையலிட்டு, குளத்தில் நீராடி சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனை செய்தனர். தீபம் ஏற்றி பக்திப்பாடல்கள் பாடி, குடும்ப நல்வாழ்வு மற்றும் நாட்டின் வளம் பெருக்க பிரார்த்தனை மேற்கொண்டனர்.


இந்த விழாவில் பங்கேற்ற பெண்கள், நீர்நிலையில் கழுத்தளவு நின்று நோன்பு நோற்றி வழிபட்டனர். செந்தூரம் தடவி பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட பெண்கள், குடும்பங்களுடன் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து வழிபாடு மேற்கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad