அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் சொந்த ஊரான மன்னார்குடியில் வெற்றிபெற வேண்டி கிராம மக்கள் சிறப்பு அபிஷேகம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 November 2024

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் சொந்த ஊரான மன்னார்குடியில் வெற்றிபெற வேண்டி கிராம மக்கள் சிறப்பு அபிஷேகம்.


அமெரிக்கா அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் இரு கட்சி ஆட்சி முறை பின்பற்றும் அமெரிக்கவில் ஜனநாயகக் கட்சியை குடியரசு கட்சி என இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடும்  போட்டி நிலவிவந்தது தேர்தல் இந்திய நேரபடி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.


அமெரிக்க  அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், இந்தியாவில் தமிழகத்தில் திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள  துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஸ்டெனோகிராஃபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா.  மகள் தான் கமலா ஹாரிஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். 


கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தது படிப்படியாக அரசியலில் வளர்ந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் கிராம மக்கள் கமலா ஹாரிஸ் குல தெய்யவமான தர்மசாஸ்தா  கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்  அமெரிக்காவிலிருந்து கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் சிறப்பு பிராத்தனை நிகழ்களில் கலந்துக்கொண்டு கமலா ஹாரிஸ் வாழ்க என முழக்கமிட்டனர் . கல்லூரிமாணவி கமலா ஹாரிஸ் வெற்றிபெற பாடல் பாடினார்.


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad