திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் குக்கிராமத்தில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு தென்பரை கிராமம் மட்டுமன்றி சுற்று வட்டார பகுதி மாணவ மாணவியர்களுக்கு இணைத்துக்கொண்டு அரசு போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகளை அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் நடத்தி வருகிறது.
இத்தகைய பயிற்சி வகுப்பானது பள்ளி விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கான இலவச பயிற்சி வழங்கி வருகிறது. இம்மையத்தில் படித்தவர்கள் 2023 முதல் 2024 வரை சுமார் 60 க்கும் மேற்பட்டோர் அரசு பணியாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் சென்னை உயர்நீதிமன்றத் தேர்வு மற்றும் தொழில்நுட்ப தேர்வுக்கு தேர்வுக்கூட ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி தென்பரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை ஓய்வுபெற்ற துணை இயக்குனர் திருநாவுக்கரசு உயர் நீதிமன்றத் தேர்வு எழுதக்கூடிய 30 பேர் ம.ற்றும் தொழில்நுட்ப தேர்வு எழுதக்கூடிய 10 பேர் என 40 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அரசு பள்ளி ஆசிரியா்கள் , உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment