பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 October 2024

பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அமைந்துள்ள இராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஏழை ஏளிய மாணவ மாணவியர்கள் சுமார் 1500த்திற்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இக்கல்லூரியில் தேர்வு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  

குறிப்பாக ஒவ்வொரு பாடத்துறை வாரியாக தேர்வுக்கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையாக உயர்த்தியுள்ளது.  மேலும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் இல்லாததால் மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ மாணவியர்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு தேர்வு கட்டண உயர்வை கண்டித்தும், தேர்வுக் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் க. கோபி, மாவட்ட துணை தலைவர் எஸ். சிவனேஷ் மாவட்டகுழு உறுப்பினர் எஸ். பிரசன்னா, ஆர். தர்சன், பிரேம்குமார், ஹரிஹரன்,ரதன்மகாராஜா, ஹரிதாஸ், காஸ்ட்ரோ, ஜெயஸ்ரீ, உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்  

No comments:

Post a Comment

Post Top Ad