40 மாதத்தில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான முதல்வர் ஸ்டாலினின் பதவி விலக கோரி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக நகர செயலாளர் ஆர்.ஜி,குமார் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் அரிசி, ஆயில், உள்ளிட்ட உணவு பொருட்கள் தட்டுபாடியின்றி வழங்க வலியுறுத்தி மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் 40 மாத கால திமுக ஆட்சியில் பால் விலை உயர்வை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி மன்னார்குடியில் அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்திலிருந்து , காளவாய்கரை வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment