மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வால் மக்களை வாட்டி வதைத்து வரும் ஸ்டாலின் அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தவின்படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று வரி உயர்வால் மக்களை வாட்டி வதைத்து வரும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியது..bஎல்லா இடங்களிலும் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் போதை பொருள் புலக்கம் அதிகரித்ததே ஆகும்.
விமான சாகச நிகழ்ச்சியில் உயிர்பலிக்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் கூறியது போல் முறையாக பாதுகாப்பு வழங்காததே ஆகும்.15 லட்சம் பேர் கூடுகிற நிகழ்ச்சியில் முறையான பாதுகாப்பு ஏற்படுத்தப்படாததன் விளைவு இந்த உயிர் இழப்புக்கு காரணம். இரட்டை இலையையும் அதிமுகவையும் எடப்பாடியார் ஒரே பாதையில் கட்டுக் கோப்பாக செலுத்தி வருகிறார். அவரது தலைமையில் 2026-ல் அதிமுக நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.
இந்த ஆட்சியில் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் இந்த ஆட்சியில் நிம்மதியாக இல்லை. உரிய நீரை உரிய காலத்தில் இந்த அரசு பெற்றதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.இந்தப் போராட்டத்தில் கழக மாவட்ட பொருளாளர் ஏ.என். ஆர். பன்னீர்செல்வம் , மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யு .மணிகண்டன்,செந்தில்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment