திருவாரூர் அருகே 30 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 October 2024

திருவாரூர் அருகே 30 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா குடவாசல் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை குடவாசல் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஆர்பணித்தார். 

இதே போல திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பண்ணையூர் ஊராட்சியில் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்   ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad