திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாரஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்தார்.
அப்போது திருவாரூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் இருபதாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இதன் தொடர்ச்சியாக இன்று மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர், திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment