வெற்றி பெற செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிழ்ச்சி பொங்க பேச்சு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 26 September 2024

வெற்றி பெற செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிழ்ச்சி பொங்க பேச்சு.


தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அறிவித்தபடி 40க்கு 40 சாதனை வெற்றியை பெற செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிழ்ச்சி பொங்க பேச்சு.

தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வை. செல்வராஜ் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து தீவிர பயணம் மேற்கொண்டு வருகிறார். 


திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் கிராமத்தில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் திறந்த ஜீப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன பேரணியாக புறப்பட்டு அத்திசோழமங்கலம், திருமதிகுன்னம், கண்கொடுத்தவணிதம், தாழைக்குடி அம்மையப்பன்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


அப்போது பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்க்கு ஆரத்தி எடுத்தும், ஆள் உயர மாலை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்களுக்கு நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். 


தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பேசியபோது தெரிவித்ததாவது... தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அறிவித்தபடி தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களை கைப்பற்றி மகத்தான சாதனை புரிந்துள்ளோம். இந்த நூற்றுக்கு நூறு சாதனை வெற்றியை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பெறவில்லை. 


இந்த மகத்தான சாதனை வெற்றியை பெற்றதற்கு காரணமான ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கொரடாச்சேரி திமுக ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் என்கிற கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad