தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வை.செல்வராஜ் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தீவிர பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட எரவாஞ்சேரி, திருவீழிமிழலை, மணவாளநல்லூர், அதம்பார், மருதுவஞ்சேரி, விளாகம், திருப்பாம்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் வடமட்டம் ஜோதிராமன் தலைமையில் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்க்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மணவை. சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் சாந்தி பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment