திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் தலைமுறை தலைமுறையாக மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்து வந்தனர் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல் புதுவிதமான மண்பாண்டங்களையும் செய்து வந்தனர் இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள குயவர்கள் தங்களது கை வண்ணத்தில் பலவிதமான விநாயகர் சிலைகளை அழகுற தங்கள் கைகளால் வடிவமைத்து விற்பனை செய்தனர்.
கடந்த ஆண்டுகளில் இவர்கள் தயாரித்த விநாயகர் சிலைகளின் விற்பனை அதிகளவில் நடைபெற்றது இதனால் இப்பகுதி மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைத்தது தற்போது மண்பாண்ட தொழிலும் நலிவடைந்துவிட்ட நிலையில் மண்பாண்டம் செய்யும் குயவர்கள் கட்டிட வேலைகளுக்கு சென்று அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு பானை சட்டி அடுப்பு போன்றவையும் கார்த்திகை மாதங்களில் அகல் விளக்குகள் போன்றவையும் கூட தங்கள் பகுதியில் செய்வதை கைவிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்து மன்னார்குடி பகுதியில் விற்பனை செய்து வந்தனர் .
இவர்களின் நிலை எவ்வாறு இருக்க ஒரு நாள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை நம்பி கடந்த இரண்டு மாதங்களாக முற்றிலும் ரசாயனமின்றி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை செய்து வந்தனர் ஆனால் இந்த வருடம் வரும் 7 தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்னும் மூன்று தினங்களில் உள்ளது.
இருந்த போதும் இவர்கள் தயாரித்த விநாயகர் சிலைகள் பெரும்பாலானவை தற்போது வரை விற்பனையாகாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விநாயகர் சிலை செய்ய ஆனால் செலவுகள் மற்றும் உடல் உழைப்பு வீணாவதாகவும் இப்பகுதி குயவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே முகாமிட்டு விநாயகர் சிலை செய்ய தேவையான அச்சு போன்றவற்றை வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்தும் சுண்ணாம்பு மற்றும் ரசாயன கலவையை பயன்படுத்தி மிகவும் நேர்த்தியான விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதனால் இப்பகுதி குயவர்களின் விநாயகர் சிலைகள் இளைஞர்களையும் பக்தர்களையும் ஈர்க்கவில்லை இதன் காரணமாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படாமல் காட்சி பொருளாகவே வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளது இதனால் குயவர்கள் மனவேதனையில் உள்ளனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment