மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளியின் கப்பற்படை என்.சி.சி- மாணவர்கள் சார்பில் ஹெர் கர் திரங்கா பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளியின் கப்பற்படை என்.சி.சி- மாணவர்கள் சார்பில் ஹெர் கர் திரங்கா பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.


78வது சுதந்திர தினத்தை நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி எனும் பொருள்படும் வகையில் ஹர் கர் திரங்கா என்ற பிரச்சார இயக்கம் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நாட்டின் குடிமக்கள் தேசிய கொடியுடன் புகைப்படம் எடுக்கவும் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விடவும் அரசு முன் முயற்சி செய்து வருகிறது.

பிரச்சார இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக யாரை செல்போனில் அழைத்தாலும் பதிவு செய்யப்பட்ட பிரதமரின் குரல் ஒலித்து வருகிறது. கப்பல் படை என்சிசி யின் ஐந்தாவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி அருண் நாட் அவர்களின் சுற்றறிக்கையின்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் என்சிசி கப்பற்படை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.


இந்நிக்ச்சியின் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.திலகர் தலைமை வகித்தார். என்சிசி அதிகாரி எஸ். அன்பரசு மாணவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினார். பள்ளியின் தாளாளர் எஸ். சேதுராமன் மாணவர்கள் அனைவருக்கும் தேசிய கொடியை வழங்கி பேசினார். நிகழ்வில் மூவர்ணக் கொடியின் அமைப்பு, வரலாறு, அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களில் தேசியக் கொடியை பயன்படுத்தும் முறை, கொடி மரியாதை ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad