நடவு திருவிழாவினையொட்டி ஸ்ரீமாணிக்கவண்ணர் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீமங்கலாம்பிகை அம்மன் தாமரை பூ வாகனத்திலும், ஸ்ரீவினாயகர், வள்ளிதேவசேன சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வர்ர் ரிஷப வாகனத்திலும் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாத்யங்கள் இசைக்க நாற்றுகட்டுகள் எடுத்துவரப்பட்டு ஸ்ரீமங்களாம்பிகை அம்மன் கையில் நெல் நாற்றுகள் வைக்கப்பட்டு பூஜைகள், தீபாரதனைகள் நடைப்பெற்றன.
தொடர்ந்து மங்கள இசையுடன் ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமியுடன் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்து கிராமத்தின் எல்லையான ஈசான மூலையில் உள்ள விவசாய நிலத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் இறைவன், இறைவியாக வேடம் தரித்த குழந்தைகள் வயலில் இறங்கிய பின்பு பூஜிக்கப்பட்ட புனிதநீர் வயலில் ஊற்றப்பட்டது. பின்பு ஆலயத்தில் பூஜிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட நாற்றுகளை இறைவன், இறைவியாக வேடம் தரித்த குழந்தைகள் நாற்றுகளை வயலில் நட்டு நடவுத்திருவிழாவை துவக்கினர்.
இதை தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்த திரளான பக்தர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் நாற்றுகளை வயலில் நட்டு இறைவனையும், இறைவியையும் வணங்கி நாட்டில் நெல் மணிகள் பெருகி அனைத்து வளங்களையும் மக்கள் பெற்று செல்வ செழிப்போடு வாழவேண்டி இறைவனை மனமுருக வழிபட்டனர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment