திருத்துறைப்பூண்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்ததான முகாம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

திருத்துறைப்பூண்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்ததான முகாம்.


திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை திருத்துறைப்பூண்டி நகர ஆட்டூர் ரோடு கிளை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி இரத்தவங்கி இணைந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை தலைவர் முஹம்மது உசைன்  தலைமையில் கேர் அன்ட் கியூர் மருத்துவமனை வளாகத்தில்  நடைபெற்றது.

இம்முகாமிற்கு  மாவட்ட தலைவர் யாசர் அரபாத்,  மாவட்ட துணை செயலாளர் ஹாஜா மைதீன், மாவட்ட மருத்துவரணி பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி இரத்தவங்கி மருத்துவ அதிகாரி மருத்துவர் ஜெகதீஸ்வரி தலைமையில்  சாந்தி, பிரமிளா தேவி ஆகியோர் கொண்ட  மருத்துவ குழு இரத்த சேகரிப்பு பணியை மேற்கொண்டது.


இம்முகாமில் 70 நபர்கள் இரத்தக்கொடை அளித்தனர். துணை தலைவர் அப்துல்  ரஹ்மான், துணை செயலாளர் முகமது இப்ராஹிம், தைக்கால் தெரு கிளை தலைவர் ஜெயினுல் பர்மனுல்லா, பொருளாளர் ஹாஜா மைதீன், விட்டுக்கட்டி கிளைசெயலாளர் எக்கின், பாமணி கிளை தலைவர் யூசுஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் நிறைவாக கிளை பொருளாளர் சேக் உசேன் நன்றியுரையாற்றினார். இந்த ரத்ததான முகாமில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் அனைத்து மத தரப்பினரும் ஒன்றிணைந்து  சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad