திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உப்பு சத்தியாகிரக இயக்கம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமையில், காருண்யா நிர்வாக இயக்குனர் குமார் மற்றும் மாணவர்கள் குழு ஆகியோர் முன்னிலையில், கிராம நிர்வாக அதிகாரி வடிவேலு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
மாணவர்களுக்கு நோட்டு உள்பட எழுதுபொருட்கள் வழங்கி, சுதந்திர தினத்தைப் பற்றியும், அதற்காக பாடுபட்ட தேச தலைவர்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். இதில் பத்திரம் எழுத்தாளர் ரமேஷ் ,அப்துல் ரகுமான் மற்றும் மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment