எடையூரில் மாபெரும் இரத்த தான முகாம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

எடையூரில் மாபெரும் இரத்த தான முகாம்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூரில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம், திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், திருத்துறைப்பூண்டி ரத்த வங்கி, மற்றும் ஶ்ரீமதி - சரோஜா ராகவன்ஜி நினைவு கழகம் சார்பில்  மாபெரும் இரத்ததான முகாம்  நடைபெற்றது. 

இதில் திருத்துறைப்பூண்டி ரத்த வங்கியின் மூலம் 30 யூனிட்டுக்கு மேல் ரத்தம் சேகரிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு வருடமும் அவர் நினைவு தினத்தில்  ரத்த தானம் செய்வதாக மறைந்த ஸ்ரீமதி சரோஜா குடும்பத்தினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த இரத்த தான முகாமை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் எம்.பி.  ஏ கே எஸ் விஜயன்  கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.


திருத்துறைப்பூண்டி  நூற்றாண்டு அரிமா சங்கத் தலைவர் அரிமா தங்கமணி முகாமிற்கு தலைமை தாங்கினார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் முனைவர் துரை ராயப்பன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் அரிமா ராஜ்மோகன் மற்றும் பொருளாளர் அரிமா நவீன் குமார் மற்றும் அரிமா அகல்யா மணிவண்ணன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.


 திருத்துறைப்பூண்டி இரத்த வங்கி ஊழியர் ஜெயந்தி, திருவாரூர் இரத்த வங்கி மருத்துவர் இவாஞ்சலின், இரத்த வங்கி செவிலியர் சுதா லெட்சுமி, மருத்துவர் அஸ்வின், ஆகியோர் இரத்த தான முகாம் சிறப்பாக அமைய உதவினர். எடையூர் ஒன்றிய கவுன்சிலர் ந.உ.சி துரை அரசன், எடையூர் வர்த்தக சங்க தலைவர் ந.உ.சி மாதவன்,பாரதமாதா நிறுவனர் முனைவர் எடையூர் மணிமாறன், பூமி தான வள்ளல் ராகவன் ஜி மகள்கள் ஆசிரியை இந்திரா, சித்ரா ,விமலா, பேரன்கள்  வருண் ,சாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


எடையூர் பிரசிடென்ட் ராதிகா கணேஷ் குமார்,சங்கேந்தி பிரசிடென்ட்  ஏ.கே. ராஜா, முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் அமுதா மனோகரன், கவுன்சிலர் எஸ்.ஜி . முருகையன், சங்கேந்தி முன்னாள் கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சண்முகம், பொருளாளர் நாகராஜன், முன்னாள் பிரசிடென்ட் வீரையன்,நல்லாசிரியர் புலவர் மணி, எடையூர் பள்ளி தலைமை ஆசிரியர் அமுத ராசு, உதவி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் மற்றும் முன்னாள் இந்நாள் ஆசிரிய ஆசிரியைகள், முன்னாள் இந்நாள் மாணவ மாணவிகள்  மற்றும் திரளான ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டு அம்மையாருக்கு புகழஞ்சலியும், இரத்ததானத்திற்கு வாழ்த்துரையும் வழங்கினர். முகாம் இனிதே நிறைவு பெற்றது.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad