2026-யில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி அதற்காக கழக உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவுறுத்தல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 August 2024

2026-யில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி அதற்காக கழக உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவுறுத்தல்.


திருவாரூரில் அதிமுக மாவட்ட செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியது, மீண்டும் எடப்பாடியார் ஆட்சி வரவேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் பார்த்துக் கொள்வார். 

2026-இல் வலிமையான கூட்டணியை பொதுச் செயலாளர் அமைப்பார். 2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பது யாராலும் தடுக்க முடியாது. திருவாரூர் மாவட்டத்தில் அஇஅதிமுக வென்றது என்ற நிலையில் நீங்கள் ஏற்படுத்தி தர நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை காமராஜ் வழங்கினார். பின்னர் திருவாரூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அதிமுகவில் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வரவேற்பு அளித்தார். 


கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகி ராம், ஒன்றிய, பேரூராட்சி ர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad