திருவாரூர் மடப்புரம் பகுதியில் கலைஞர் 6 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி 250க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

திருவாரூர் மடப்புரம் பகுதியில் கலைஞர் 6 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி 250க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கல்.


திருவாரூர் நகர்மன்ற உறுப்பினரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை தலைவருமான எஸ்.என். அசோகன் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில், திமுக திருவாரூர் நகரசெயலாளர்  வாரைபிரகாஷ்  ஆகியோர்  டாக்டர் கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து  மலர்தூவி பொதுமக்களுடன்  புகழஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில்  டாக்டர் கலைஞர்  சிறுவயது முதல்  தமிழ்நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும், பெண்களுக்கு  சமுதாயத்தில் சமத்துவமான சட்டங்கள் இயற்றி,  அரசியல், கலை  உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்  முன்னேற பாடுப்பட்டு ஆற்றிய பணிகள் பற்றியும், தமிழுக்காக பணியாற்றி  இந்தியாவில் பெயர்பெற்ற  அழியாபுகழ் கொண்ட  ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி என  வாழ்க்கை வரலாற்றை  சமூக ஆர்வலர்கள் , அனைத்து கட்சியினர் கூட்டத்தில் பேசினர்.


இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 6 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி 250க்கும் மேற்பட்ட பெண்களுக்கு  நலத்திட்டங்கள்  முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பாக வழங்கினர். இதில் வழக்கறிஞர் மணிவண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் அன்வர்உசேன், பாரதிகணேசன், கமலா, மதிமுக ஆரூர்சீனிவாசன், சிபிஐ  தர்மதாஸ் உட்பட சமூக ஆர்வலர்கள்  மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad