திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் காளவாய்க்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வடுவூர் அக்ரஹாரம் புரானதெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ( 37) சென்னையில் தனியார் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது குழந்தைகளை மன்னார்குடி தனியார் பள்ளியிலிருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்ற போது மேற்கண்ட பெட்ரோல் பங்கிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் வானத்தின் மீது மோதுவது போல் வேகமாக வந்ததை கண்டதும்.
கோபாலகிருஷ்ணன் ஏன் இப்படி வேகமாக வருகிறீர்கள் என கேட்டதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த அரவிந்தன் , விஜய் , சண்முகசுந்தரம், ஆகியோர் வழி மறித்து கை மற்றும் கட்டையால் கொலைவெறி தனமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக காயம்பட்ட கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் கரிகாலசோழன் தலைமையில் போலீசார் குற்றவாளிகள் மூன்று பேருக்கும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட முவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு மன்னார்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment