திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் வட்டார அளவிலான புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட தன்னார்வலருக்கான பயிற்சியை திட்ட இணை இயக்குனர் பொன்குமார் பார்வையிட்டு தன்னார்வலர்களுக்கு திட்டம் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
இதில் கல்வி கற்போருக்கு எவ்வாறு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு எவ்வாறு கற்பிப்பது என விளக்கினார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உதவி திட்ட அலுவலர் பழனிவேல், வட்டார கல்வி அலுவலர் குமரேசன், வட்டார வள மையமேற்பார்வையாளர் பூபாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment