திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட பூந்தோட்டம் அருகே மோட்டாத்தூர் பகுதியில் கோவில் திருமாளம், செருவளூர், கொத்தவாசல் , அகரதிருமாளம் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் திருவாரூர் மாவட்ட பிற்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களில் வருவாய்துறை, காவல்துறை, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட துறைகள் சம்பந்தமான உடனடி தீர்வு காணக்கூடிய 150 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது . தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான ஆணை 30 பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் மனோகரன் மற்றும் கேப்டன் செல்வராஜ், திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment