திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து தனி நபர்களிடமிருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் தீவிரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர்பகுதிக்குட்பட்ட மாவட்ட மைய நூலகம் அருகில் உள்ளகோவிலுக்கு சொந்தமான நிலம் தனியாரிடம் இன்று மீட்கும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
விஜயபுரம் அருள்மிகு ரேணுகா தேவி அம்மன் திருக்கோயிலுடன் இணைந்த ஐநூற்று பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமான 35,276 ச. அடி இடமும் அ/மி கபிலேஷ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 1,33,252 ச.அடி ஆக கூடுதல் 1,68,528 ச.அடியும் தற்போதைய மதிப்பு ரூபாய் 67கோடியே 41 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.
தொடர்ந்து மீட்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மீட்பு நிகழ்ச்சியில் திருவாரூர் வட்டாட்சியர் பிரபாலெஷ்மி ( ஆலய நிலங்கள்) , திருக்கோயில் செயல் அலுவலர் செ.சண்முகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment