திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கத்தில் கூரை வீடு மற்றும் ஒரு வைக்கோல் போர் எரிந்து நாசம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 29 July 2024

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கத்தில் கூரை வீடு மற்றும் ஒரு வைக்கோல் போர் எரிந்து நாசம்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் பகுதியில் ஆற்றங்கரை தெருவில் கூரை வீட்டில் வசித்து வருபவர் பக்கிரிசாமி, கலா இவர் வீட்டில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்துக் கொண்டதால் பக்கிரிசாமி ,கலா இருவரும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். 

தீ கட்டுக்குள் அடங்காமல் மளமளவென பரவ தொடங்கியதால் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் வந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் காற்று வேகமாக வீசியதால் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ ,மெத்தை,  கிரைண்டர் மிக்ஸி டிவி என  சுமார் 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாயின.


இது சம்பந்தமாக திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்டோர் தீக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதே போல கட்டிமேடு ஆதிரங்கம் மெயின் ரோட்டில் உள்ள நடராஜ் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் மதியம் தீ பிடித்தது எரிந்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்  தீயை அணைத்தனர். 


இருந்தாலும் தீயில் வைக்கோல் போர் முற்றிலுமாக இருந்து நாசமானது. இது சம்பந்தமாகவும் தீக்கான காரணம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad