திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் பெரியநாயகி பிறவி மருந்தீஸ்வரர் பைரவர் சனீஸ்வர பகவான் மற்றும் வேதாரண்யேஸ்வரர் முருகன் வள்ளி தெய்வானை உள்ளிட்ட ஏராளமான சுவாமிகள் அருள் பாவிக்கின்றனர். இந்த ஆலயத்தில் இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு காலையிலிருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
பின்பு முருகன் வள்ளி தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இவ்விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் முருகையன் கணக்கர் ராஜ்மோகன் மற்றும் ஆலய தலைமை குருக்கள் பாலு மற்றும் வினோத் கங்காதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment