திருவாரூரில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக இனசுழற்சி முறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் முறையாக பணிநியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும் உட்பட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டதலைவர் குமார், மாநில துணை பொதுச்செயலாளர் அருண்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காவலன் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வில்லை என்றால் அடுத்த மாதம் ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment