திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே சிபிஎம் ஒன்றிய செயலாளர் கோபிநாத், நகரச் செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், தனியார் மின்சார கொள்முதலை தவிர்க்க வேண்டும், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்திட வேண்டும், உதய் மின் திட்டத்திலிருந்து வெளியேற வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோன்று வலங்கைமான் ஒன்றியத்தில் ஆலங்குடி கடைவீதியில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் இராதா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் தம்பு சாமி, துணை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment