திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வலங்கைமான் வட்டார வள மையத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களான பாலசுந்தரம், நிர்மல், மனோஜ் ஆகியோர் பயிற்சிகருத்தாளர்களாக செயல்பட்டனர். வட்டார அளவில் நடைபெற்ற பயிற்சியில் எளிய மற்றும் கவர்ச்சியான கற்பித்தல் முறைகளை கையாளுவது, மாணவருடன் எப்படி தொடர்பு கொள்வது, மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவது, பள்ளிக்கு செல்ல இயலாத அல்லது படிப்பில் பின்னடைந்து போன மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தில் நேரடியாக கல்வி கற்பிப்பது,
கல்வி தடைப்பட்ட மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்ந்து பயிலும் அளவுக்கு தகுதியானவர்களாக மாற்றுவது ஆகியவை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்றது. இதில் 80 இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment