திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் தெரிவித்ததாவது வெள்ளாளர் முன்னேற்ற கழக கட்சி கொடியின் வர்ணத்தை நடிகர் விஜய் த.வெ.கழகத்திற்கு பயன்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது, வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சியின் கொடியின் கலரும் ஒன்றாக உள்ளது இதில் வித்தியாசம் என்னவென்றால் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியில் புலி உள்ளது நடிகர் விஜயின் கட்சியின் கொடியில் யானை உள்ளது இரண்டு கட்சிகளின் கொடியும் ஒரே மாதிரியாக உள்ளது வெள்ளாள முன்னேற்ற கழகம் கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது இந்த கட்சியின் கொடியை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்ப்பதற்கு மிகவும் சிரமம்பட்டுள்ளோம், சினிமாவில் ஹிந்தி, ஆங்கில படத்தை கதைகளை திருடி நடிக்கின்ற விஜய் தனதுசொந்த கட்சிக்கு கொடியை சுயமாக உருவாக்க முடியாமல் வெள்ளாளர் முன்னேற்ற கழக கட்சியின் கொடியை பயன்படுத்தி இருப்பது நியாயம் இல்லை.
இது சம்பந்தமாக நடிகர் விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளோம் அந்த கடிதத்திற்கு இதுவரை நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை அதனால் நீதிமன்றத்தை நாட உள்ளோம் அதற்கு என்ன தீர்வு கிடைக்க போகிறது என்பதை பார்ப்போம், இது சம்பந்தமாக கடிதம் கொடுத்து அதற்கு பதில் அளிக்காத விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு என்ன சாதனை செய்யப் போகிறார்.
கொடியில் கூட நம்பகத்தன்மை இல்லாத விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது எனது கேள்வியாக இருக்கிறது. நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் மக்களுக்கு நன்மை செய்யுங்கள் நாங்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் ஆனால் இது மாதிரி அடுத்த கட்சியினர் பயன்படுத்தும் கொடியினை அபகரிப்பது எந்த விதத்தில் நியாயம்.
நீதிமன்றத்தில் முறையான தீர்ப்பு வரவில்லை என்றால் விஜய் தரப்பு இதற்கு கட்டுப்படவில்லை என்றால் வெள்ளாளர் முன்னேற்ற கழக சங்கமும் முக்குலத்து புலிகள் கட்சியும் இணைந்து நடிகர் விஜய்யின் வீட்டை முற்றுகை இடுவோம் என இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment