திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய குழுக் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தில், ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவு காரணமாக ஊரகப் பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை மேலாண்மை செய்யும் விதமாக அன்னுக்குடி, ஆவூர், இனாம்கிளியூர், ஏரி வேலூர், கோவிந்தகுடி, கண்டியூர், மதகரம், மணலூர், தெற்கு பட்டம், ஊத்துக்காடு, வீராணம், மாணிக்கமங்கலம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் 14 பணிகள் மாநில பேரிடர் மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு பேரிடர் மேலாண்மை பொறுப்பு நிதி விடுவிப்பை எதிர்நோக்கி ஒன்றிய பொது நிதியில் இருந்து மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ள நிலையில் ஒன்றிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு தீர்மானம் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் விமலா பேசுகையில், மாளிகை திடல் ஊராட்சியில் பாலம் அமைத்து தர வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேல், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரபாகரன், தாமரைச்செல்வன், ரசூல் நசிரின, கீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment