காவிரி டெல்டாவில் சிப்காட் தொழிற்சலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மன்னார்குடியில் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 August 2024

காவிரி டெல்டாவில் சிப்காட் தொழிற்சலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மன்னார்குடியில் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரியில் உபரி நீர் கடலிலே கலப்பதை தடுத்து மேகதாட்டு அணை கட்டி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்போகிறோம் என்று தவறான உள்நோக்கத்தோடு பொய் பிரச்சாரம் கர்நாடக செய்து வருகிறது. 

மேகதாட்டு அணை கட்டுமானத்தை மேற்கொண்டால் தமிழ்நாடு முழுமையும் அழிந்து போய்விடும். எனவே ராசிமணல் அணை கட்டுவது ஒன்றுதான் தீர்வாக அமையும் என கடந்த 1997 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் தேவகவுடாவுடன் அன்றைய முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்தியதாக அவரது சட்டமன்ற உரை குறித்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்தை தமிழ்நாடு அரசு உணர்ந்து ராசிமணல் அணை கட்ட முன்வர வேண்டும். 


அதற்கான ஒத்த கருத்தை அரசியல் கட்சிகளிடம் உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும். ராசிமணல் அணை மட்டும் தான் கட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக ஆணையத் தலைவரின் கருத்தும் அமைந்துள்ளது  மத்திய அரசு மேகதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்கும் சூழல் உள்ளதாக தெரிய வருகிறது.


எனவே தமிழ்நாடு அரசு  ராசிமணல் அணை கட்டுமான பணியை தீவிரப் படுத்த வேண்டும்.  இதற்கான ஒத்த கருத்து உருவாக்குவதற்கு கர்நாடக விவசாயிகளோடு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  காவிரி டெல்டாவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பதற்கு விளைநிலங்களை கையகப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 


விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக காவிரி டெல்டா விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதாக கூறி சட்டமன்றத்தில் நாகை முதல் திருச்சி வரை வேளாண் தொழில் வட பெரும் வழி சாலையாக அறிவிக்கப்பட்டது. 


அப்படியானால் என்ன தொழிற்சாலைகளை அமைக்க போகிறோம் என்பதை முதற்கட்டமாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதன் அடிப்படையில் தான் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த முன்வர வேண்டும். மாறாக பேரழிவு திட்டங்களுக்கு கார்ப்பரேட்டுகளை களம் இறக்க நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். 


மோடி அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான கொள்கையை தனது திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம், எம்.எஸ்.சுவாமிநாதன்பரிந்துரை நிறைவேற்றுவது, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டம், உதயமின் திட்டம் உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும். 


விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம் மோடி அரசு ஏற்க மறுக்கிறது .  எனவே போராட்டத்தை இந்தியா முழுவதும் தீவிர படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து வருகிற   ஆகஸ்ட்  27ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ரவி மினி மீட்டிங் ஹால் திருமண அரங்கத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 


இக்கருத்தரங்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெகஜித்சிங் டல்லேவேல் தலைமையில் முன்னணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார். முன்னதாக ராசிமணல் அணை கட்டுவது குறித்து கலைஞர் சட்டமன்றத்தில் உரை குறித்த புத்தகத்தில்  இடம் பெற்றுள்ள தொகுப்பு நகலை வெளியிட்டார்.


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad