விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டு மல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் கல்லூரி மற்றும் சமூக சேவை சங்கம் சார்பில் நடைபெற்ற ஹெல்மேட் விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும், வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்து விளக்கி பேசினார்.
பின்னர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஹெல்மேட் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி மன்னார்குடியில் தனியார் கல்லூரி வாயில் முன்பு தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் ஹெல்மேட் அணிந்து இரண்டு சக்கர வாகனத்தில் பதாகைகள் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment