பகுதியில் அருள்பாளிக்கும் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் குடமுழுக்கு விழாவினையொட்ட கடந்த இருதனிஙக்ளாக 2 கால யாகசாலை பூஜைகள் ஏராளமான வேத விற்பன்னர்களைக்கொண்டு நடைபெற்றது.
2ம் கால யாகசாலை பூஜையின் நிறைவாக மகாபூர்ணாஹூதி பூஜை நடைபெற்று யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில சுமந்து ஆலயத்தினை வலம் வந்து பின்னர் கோபுர விமான சலசங்கங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். இதனை தொடர்ந்து சிவாச்சாரியார் கோபுர விமான கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்துவைத்தனர்.
அதனை தொடர்ந்து ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment