மன்னார்குடியில் உள்ள பிரபல உணவகத்தில் ஆன்லைன் மூலம் தோசை பார்சல் வாங்கி சாப்பிட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 July 2024

மன்னார்குடியில் உள்ள பிரபல உணவகத்தில் ஆன்லைன் மூலம் தோசை பார்சல் வாங்கி சாப்பிட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.



திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆர்.பி.சிவன் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரவின்குமார் (23). இவர் தமிழகத்தில் சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்ட ஆன்லைன் மூலம்  வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தின் வாயிலாக மன்னார்குடியில் உள்ள பிரபல ஆரியபவன் உயர்தர சைவ உணவகத்தை குறிப்பிட்டு பொடி தோசை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

இத்தகைய ஆர்டர் பேரில் பொடி தோசையினை பெற்ற பிரவீன்குமார் தோசையினை சாப்பிட்டு கொண்டிருந்த போது தொண்டையில் உணவு அறுகியுள்ளது அப்போது தோசையில் கொடிய விஷம் கொண்ட பூராண் என்ற ஊர்ந்து செல்லும் உயிரினம் தோசையில் இறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பிரவீன் குமார் சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் செய்துள்ளார்.  இதற்கு இடையே பூராண் பூச்சியோடு தோசையினை சாப்பிட்ட பிரவின்குமாருக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. 


உடனடியாக பிரவீன்குமாரை அவரது உறவினர்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  கொடிய விஷம் கொண்ட பூரான் பூச்சியினத்தை பாதி  அளவிற்கு தோசையுடன் சாப்பிட்ட பிரவீன் குமாருக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் போதிலும் அவருக்கு ஏற்பட்டுள்ள வாந்தி பேதி நிற்காததால் தற்போது பிரவீன் குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


ஆனால் ஹோட்டல் நிர்வாகமோ பணத்தை திரும்பி வாங்கிகொள்ளுங்கள் என கூறி பாதிக்கபட்ட பிரவின்குமாரை மருத்துவமனையில் அனுமதித்து 4 மணிநேரமாகியும் இதுவரை ஆறுதல்கூறகூட வரவில்லை என்பது அனைவரையும் வருத்தமளிக்ககூடிய செயலாக இருக்கிறது. உணவகங்களில் நடக்கும் கலப்படங்களை ஆய்வு செய்யும் உணவுபாதுகாப்புதுறை மன்னார்குடி அதிகாரி விடுப்பில் இருப்பதால் திருத்துறைப்பூண்டி உணவுபாதுகாப்புதுறை அதிகாரியை பொருப்பாக நிர்வகித்துள்ளது. அவரும் சம்பவம் நடந்து பலமணிநேரமாகியும் வரவில்லை இது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது என சம்பந்தபட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad