திருவாரூரில் மாணவர் பெருமன்றம் சார்பில் தனியார் கூட்டாரங்கில் நடைப்பெற்ற கூட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திருவாரூர் மாவட்டக்குழு கூட்டம் மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் ஜெ.பாரதசெல்வன் தலைமையிலும் மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ஜெ.பி.வீரபாண்டியன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் நீட் தேர்வு மருத்துவ மாணவர்கள் மீது மட்டுமல்ல மருத்துவத்துறைக்கே இழைக்கப்படும் அநீதி ஆகும். தற்போதைய இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு முடிவின் மூலம் வெளிவந்துள்ள குளறுபடிகள் நீட் தேர்வை அநீதி என்று கூறிவருவதற்கான சான்றாக மாறியிருக்கிறது.
நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் வெளியானது தேர்வின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரித்தது. தற்போது வெளிவந்த தேர்வு முடிவுகள் இக்குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளன.
ஹரியானாவில் தேர்வு எழுதிய குறிப்பிட்ட ஒரு மையத்தில் இருந்து மட்டும் 8 மாணவர்கள் முதலிடம் பெற்று இருப்பது மற்றும் குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் இருந்து அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்கள், இது மட்டுமல்லாது தவறான வினாக்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் கழிக்கப்படும் நிலையில் இரண்டாம் இடம்பெற்ற மாணவர்கள் 719 மதிப்பெண்கள் என்றும், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள் 718 என்றும் வெளிவந்துள்ள முடிவுகள் தேர்வில் குளறுபடி நடந்து இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
மேலும் பொது பிரிவினருக்கு 164 மதிப்பெண்களை தகுதி மதிப்பெண்களாக தீர்மானித்திருப்பது மற்றும் கருணை மதிப்பெண்கள் என்று நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு தவறுகளை நடத்துகிறது என்பதையும் அடையாளம் காட்டுகிறது.
எனவே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தற்போது இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை உயர்கல்வி மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசுகளே முன்னெடுக்க வேண்டும்.
தேசிய தேர்வு முகமை ஒரு தனியார் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மீது தொடர்ந்து வரும் குற்றச்சாட்டுகள் இது நியாயமற்ற அமைப்பு என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே இந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டண வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் மாற்று சான்றிதழ், டிசி, மார்க் சீட் போன்றவற்றை கேட்கும் பொழுது அவற்றை தர மறுத்து, அதை பயன்படுத்தி பணம் பறிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிகராக, அரசு கல்வி நிலையங்களில் கட்டமைப்பை உயர்த்து. தனியார் கல்வி நிறுவனங்கள் மீது மாணவர் அளிக்கும் புகார் இது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு அமைத்துடு. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டதில் இளைஞர் பெருமன்றதின் மாவட்டச் செயலாளர் துரை.அருள்ராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கா.கோபி, சே.அருண், எஸ்.கனகராஜ் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment