திமுக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறநிலையத்துறை மூலம் ஆலயங்களை நிர்வகித்து அதன் வாயிலாக ஆலயங்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் பணத்தை திருடி வருவதோடு, இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தும் நகைகள் களவாடப்படுவதாகவும், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், முதலான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழர்களின் பண்பாடு, கலாச்சாராம் இவற்றின் மையமாக விளங்கும் கோவில்களை நாத்திக இந்துவிரோத திராவிட மாடல் திமுக அரசே கோயிலைவிட்டு வெளியேறு என்ற முழக்கத்துடன் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டங்களில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் விக்னேஷ், நாடிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment