பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழுவினரை காவல்துறையினரால் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் அறிக்கை விடுத்துள்ளார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 July 2024

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழுவினரை காவல்துறையினரால் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் அறிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி ஆர் பாண்டியன்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகள்  தீவிரமடைந்து வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

சட்டவிரோதமாக விமான நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக விமான நிலையம் அமைப்பதற்கு முயற்சிக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏற்கனவே உள்ள விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்று விமானத்துறை கட்டுப்பாடுகள் வைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது சட்ட விரோதமாகும். 


அதிலிருந்து 20 கிமீதொலைவில் அரக்கோணம் விமான படை விமான நிலையம் உள்ளது. 60 கிலோ மீட்டர் தொலைவில் அப்துல்லாபுரம் விமான நிலையம், அதிலிருந்து தற்போது 100 கிலோமீட்டர் தொலைவில் ஓசூர்  விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையில் விவசாயத்தை  நம்பி வாழுகிற மக்கள் தன் விளைநிலங்கள் விமான நிலையம் அமைப்பார்க்கு தரமாட்டோம் என மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அடிப்படையில் காஞ்சிபுரம் சென்ற ஏகனாபுரம் விவசாயிகளை சுங்குவார்சத்திரம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு முதலமைச்சர் விமான நிலையம் அமைப்பதற்காக விவசாயிகள் எதிர்ப்பை அவமதிக்கக் கூடாது. மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக விமான நிலையம் அமைப்பதை வேடிக்கை பார்க்கக் கூடாது.


உடனடியாக விமான நிலையம் அமைப்பதற்கான சட்ட விதிமுறைகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும். அரக்கோணம் விமானப்படை விமான தளத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமேயானால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் என்பதை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க மறுப்பது வேதனை அளிக்கிறது. உண்மை நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த முன்வர வேண்டும். கைது செய்யப்பட்டிருக்கிற விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad