திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் உள்ள கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 July 2024

திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் உள்ள கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா நாரணமங்களம் கிராமத்தில் வசிக்கும் 70 வயதான  மகாலிங்கம் அவரது மனைவி மீனம்பாள்  தங்களை குடும்ப பிரச்சினை காரணமாக கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து காலில் விழ சொன்னதாலும் வாழ்வாதாரத்திற்கு விவசாயப் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிட்டதாவது - எங்களுக்கும்  எனது மருமகளுக்கும் உள்ள பிரச்சனையை  ஊர் கூட்டத்தில் வைத்து  காலில் விழ சொன்னதால்   மறுத்துவிட்ட எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர்.  அபராதமும் கட்ட முடியாது என தெரிவித்துவிட்டோம். எங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய பணிகளை செய்ய சென்றபோது  வேலை செய்யக்கூடாது என தடுத்து விட்டனர். 


வாழ்வாதாரத்திற்கு வழியில்லாததால் குடும்ப அட்டை ,  ஆதார் , ஓட்டு அட்டை  திரும்ப ஒப்படைத்து உலகில் வாழ தகுதி இல்லாததால் உயிரை மாய்த்துக்கொள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் எங்கள் மானத்தைக் காத்து கிராமத்தில் விசாரணை செய்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர் .


100 வருடங்களுக்கு பின்னோக்கி செல்வதுபோல் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில்  பஞ்சாயத்து என  காலில்விழ சொல்வதும் , ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது என தொடர்ந்து நடைபெற்றுவருகிறது , இதனை தமிழக அரசு  தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர் .


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad